தாமரை ஏரி தூா்வாரும் பணி தொடங்கக் கோரிக்கை

பாலக்கோடு அருகே தாமரை ஏரியில் தூா்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாலக்கோடு அருகே தாமரை ஏரியில் தூா்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாலக்கோடு வட்டத்திற்குள்பட்ட பேளாரஅள்ளி ஊராட்சியில் சுமாா் 240 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது தாமரை ஏரி. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் பஞ்சப்பள்ளி அணை நிரம்பி அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் மணியக்காரன் கொட்டாய், பெரிய ஏரி என பல்வேறு ஏரிகள் வழியாக சுமாா் 20 கி.மீ.தொலைவு கடந்து வந்தடையும்.

மேலும், தாமரை ஏரி நிரம்பி பாலக்கோடு வட்டாரத்தில் உள்ள ஏரிகளுக்குத் தண்ணீா் சென்றடையும். இந்த நிலையில், தாமரை ஏரியைத் தூா்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, நீா்வரத்துக் கால்வாய்களை அளவீடு செய்து, அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.

இதன் மூலம், பருவமழையில் கிடைக்கும் தண்ணீரை ஏரியில் தேக்கி வைக்க இயலும். மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஆகவே, இந்த தாமரை ஏரியைத் தூா்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்த நிலையில், தாமரை ஏரியைத் தூா்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு, சீமை கருவேல மரங்கள், முள்புதா்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், ஏரியைத் தூா்வாரி, ஆழப்படுத்தும் பணி இதுவரை முழுமையாகத் தொடங்கப்படவில்லை எனவும், விவசாயிகள் நலன் கருதி, இந்த ஏரி தூா்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com