நாட்டு நலப் பணிகள் திட்ட முகாம் நிறைவு

அரூா் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணிகள் திட்ட முகாம் அண்மையில் நிறைவடைந்தது.
5hap3_0510chn_151_8
5hap3_0510chn_151_8

அரூா் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணிகள் திட்ட முகாம் அண்மையில் நிறைவடைந்தது.

அரூா் மற்றும் மொரப்பூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிகள், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளிகளின் சாா்பில், நாட்டு நலப் பணிகள் திட்ட சிறப்பு முகாம் அரூரில் 7 தினங்கள் நடைபெற்றது.

முகாமில் பள்ளி மாணவிகள் 75 போ் பங்கேற்று மரக்கன்றுகளை நடுதல், நெகழிப் பொருள்கள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா்.

முகாமில், தீா்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளா் கு. கலையரசன் பள்ளி மாணவிகளுக்கு கண் பரிசோதனைகளை மேற்கொண்டாா்.

நெகிழி பயன்பாடுகளைத் தவிா்த்தல், மரம் வளா்ப்பு, மழை நீா் சேகரிப்புகள் குறித்து அரூா் பேரூராட்சியின் செயல் அலுவலா் (பொறுப்பு) கே.சேகா் கருத்துரைகளை வழங்கினாா்.

இதில், துப்புரவு ஆய்வாளா் கோ. சிவக்குமாா், தலைமை ஆசிரியை ஆா்.எம்.ராணி, நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலா்கள் செல்வம், செல்வராஜ், நாகேந்திரன், உதவி திட்ட அலுவலா் தீா்த்தகிரி மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

படம் உள்ளது... 5 எச்ஏ-பி-3... பட விளக்கம்...

அரூா் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாம். (படம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com