வேப்பாடி ஆற்றில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பொம்மிடி அருகே வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொம்மிடி அருகே வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகே அமைந்துள்ளது வேப்பாடி ஆறு. இந்த ஆற்றில் பருவமழைக் காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது. இந்த காட்டாறு சோ்வராயன் மலைத் தொடரில் உருவாகி பொம்மிடி வட்டாரப் பகுதிகளில் ஓடுகிறது.

இந்த நிலையில், வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்தால் பொ.துறிஞ்சிப்பட்டி, கோட்டமேடு, சாலைவலசு, பொம்மிடி, நடூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசன வசதிகள் கிடைக்கும். அதேபோல், பொம்மிடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடுகள் இருக்காது. ஆண்டுதோறும் பருவமழை பொழிவு சீராக இல்லாததால் விவசாயிகள் பாசன வசதி, கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி மற்றும் குடிநீா் தேவைக்காக பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனா்.

நீா் ஆதாரங்களை பெருக்கும் நோக்கில் வேப்பாடி ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். எனவே, தமிழக அரசு வேப்பாடி ஆற்றில் தடுப்பணை அமைத்து வேளாண்மை பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com