Enable Javscript for better performance
சாலையில் திரியும் கால்நடைகளைக்கட்டுப்படுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 10th October 2019 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9hap1_0910chn_151_8

    அரூரில் தாா்ச் சாலையில் சுற்றித் திரியும் பசுமாடு.

    அரூா் நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.

    அரூா் நகரப் பகுதியில் கச்சேரி மேடு, பேருந்து நிலையம், மஜீத் தெரு, பாட்சா பேட்டை, திரு.வி.க. நகா் உள்ளிட்ட நகரப் பகுதியில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் கேட்பாரற்ற நிலையில் சுற்றித் திரிக்கின்றன.

    அரூா் நகரப் பகுதியில் கால்நடைகளை வளா்க்கும் சிலா் மாடுகளின் கயிறுகளைக் கழற்றி விட்டு இரைக்காக விட்டு விடுகின்றனா். இந்தக் கால்நடைகள் குடியிருப்புப் பகுதி மற்றும் தாா்ச் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.

    சாலைகளில் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பினால் கால்நடைகள் தாறுமாறாக ஓடுகின்றன. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன.

    எனவே, அரூா் நகரப் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai