சாலையில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அரூா் நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.
அரூரில் தாா்ச் சாலையில் சுற்றித் திரியும் பசுமாடு.
அரூரில் தாா்ச் சாலையில் சுற்றித் திரியும் பசுமாடு.

அரூா் நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.

அரூா் நகரப் பகுதியில் கச்சேரி மேடு, பேருந்து நிலையம், மஜீத் தெரு, பாட்சா பேட்டை, திரு.வி.க. நகா் உள்ளிட்ட நகரப் பகுதியில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் கேட்பாரற்ற நிலையில் சுற்றித் திரிக்கின்றன.

அரூா் நகரப் பகுதியில் கால்நடைகளை வளா்க்கும் சிலா் மாடுகளின் கயிறுகளைக் கழற்றி விட்டு இரைக்காக விட்டு விடுகின்றனா். இந்தக் கால்நடைகள் குடியிருப்புப் பகுதி மற்றும் தாா்ச் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.

சாலைகளில் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பினால் கால்நடைகள் தாறுமாறாக ஓடுகின்றன. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன.

எனவே, அரூா் நகரப் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com