விதைப் பரிசோதனை செய்துகொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விவசாயிகளை தரமான விதைகள் பயன்படுத்திட ஏதுவாக, விதைப் பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் என

விவசாயிகளை தரமான விதைகள் பயன்படுத்திட ஏதுவாக, விதைப் பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் என விதை பரிசோதனை அலுவலா் டி. ரவி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள் தரமான விதைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விதைப் பரிசோதனை ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம் பின்புறம் விதைப் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தின் மூலம் விவசாயிகள் பணம் விரயமில்லாமல் உரிய காலத்தில் தங்களிடம் உள்ள விதைகளை பகுப்பாய்வு செய்து கொள்ள இயலும்.

விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளை, நெல் மற்றும் கீரை விதைகளாக இருப்பின் 50 கிராமும், மக்காச் சோளம் மற்றும் மணிலா விதைகளாக இருப்பின் 500 கிராமும், சோளம், உளுந்து, பாசிப் பயறு, சூரிய காந்தி, வெண்டை விதைகளாக இருப்பின் 100 கிராம் அளவும், கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறி விதைகளானால் 10 கிராம் அளவும் எடுத்து துணிப்பையில் இட்டு, பயிா், ரகம், குவியல் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பக் கடிதத்துடன் இணைத்து, விதைப் பரிசோதனை மையத்தில் நேரில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு விதை மாதிரிக்கும் பரிசோதனை கட்டணமாக ரூ. 30 வசூலிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com