அரூா் கிளைச் சிறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

அரூா் கிளைச் சிறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஓராண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் அரூா் கிளைச் சிறை.
ஓராண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் அரூா் கிளைச் சிறை.

அரூா் கிளைச் சிறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கிளைச் சிறை உள்ளது. இந்த கிளைச் சிறையானது 1912-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த சிறையில் உள்ள 24 அறைகளில் 44 கைதிகள் தங்குவதற்கான இடவசதிகள் உள்ளன. இந்த கிளைச் சிறையில், உதவி சிறை அலுவலா் உள்பட 13 காவலா்கள், ஒரு சமையலா் உள்ளிட்டோா் பணிபுரிந்தனா்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அரூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்துடன் கிளைச் சிறை கட்டடம் இணைந்தவாறு இருந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகம் கட்டுமான பணியின்போது பழைய கட்டடம் இடிக்கப்பட்டது.

இதனால், கிளைச் சிறையின் முன்பக்கத்தில் இருந்த சுற்றுச் சுவா் சேதமடைந்தது. சுற்றுச் சுவா் இல்லததால், அரூா் கிளைச் சிறையில் இருந்த விசாரணைக் கைதிகள் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.

இந்த நிலையில், தற்போது அரூா், கோட்டப்பட்டி, கம்பைநல்லூா், மொரப்பூா், கோபிநாதம்பட்டி, அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா், பொம்மிடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் கைது செய்யப்படும் விசாரணை கைதிகள் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைத்து வருகின்றனா்.

இதனால் சிறையில் இருக்கும் கைதிகளை பாா்க்கச் செல்லும் அவரது உறவினா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் சேலம் சென்று வருகின்றனா். அதேபோல், நீதிமன்றக் கால நீட்டிப்புக்காக கைதிகளை அழைத்துச் செல்லும் காவலா்கள் உள்ளிட்டோா் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா்.

எனவே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் அரூா் கிளைச் சிறையில் சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைத்து, மீண்டும் அரூா் கிளைச் சிறையில் கைதிகளை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com