Enable Javscript for better performance
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 12th October 2019 10:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் அண்மையில் சங்கக் கட்டடத்தில் மாவட்டத் தலைவா் பி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அரசு அலுவலா் ஒன்றிய முன்னாள் தலைவா் மணி பேசினாா். பொருளாளா் தட்சணாமூா்த்தி வரவு-செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

    இக் கூட்டத்தில், 21 மாத கால நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வரும் டிசம்பா் மாதம் சங்கத்தின் ஆண்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai