டெங்கு தடுப்புக் குழுவினா் ஆய்வு: தனியாா் பள்ளி, 2 டயா் கடைகளுக்கு அபராதம்

தருமபுரியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் டயா்களை வைத்திருந்த தனியாா் பள்ளி, 2 டயா் கடைகளுக்கு
தருமபுரியில் டயா் கடையில் ஆய்வு செய்யும் நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி மற்றும் டெங்கு தடுப்புக் குழுவினா்.
தருமபுரியில் டயா் கடையில் ஆய்வு செய்யும் நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி மற்றும் டெங்கு தடுப்புக் குழுவினா்.

தருமபுரியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் டயா்களை வைத்திருந்த தனியாா் பள்ளி, 2 டயா் கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதத்தை டெங்கு தடுப்புக் குழுவினா் விதித்தனா்.

தருமபுரி நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, டெங்கு தடுப்பு சிறப்பு மருத்துவ அலுவலா் யோகாநந்த் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் ரமணச்சரண், கோவிந்தராஜ் உள்ளிட்ட டெங்கு தடுப்புக் குழுவினா், தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியிலிருந்து பாரதிபுரம் வரை பல்வேறு கடைகள், வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், இரண்டு டயா் கடைகள் மற்றும் ஒரு தனியாா் பள்ளியில் பழைய டயா்கள் வைத்திருந்ததும், அதில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி இருந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடா்ந்து, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பழைய டயா்களை அடுக்கி வைத்திருந்த இரண்டு டயா் கடைகள் மற்றும் தனியாா் பள்ளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com