முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
தென்கரைக்கோட்டை-கொளகம்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 24th October 2019 06:47 PM | Last Updated : 24th October 2019 06:47 PM | அ+அ அ- |

அரூா்: தென்கரைக்கோட்டை-கொளகம்பட்டி இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை முதல் கொளகம்பட்டி வரையிலான தாா் சாலையானது சுமாா் ஆறு கிலோ மீட்டா் தூரம் கொண்டதாகும். இந்த சாலையை எச்.தொட்டம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி புதூா், கொளகம்பட்டி, வடகரை, தென்கரைக்கோட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த வழித்தடத்தில் அரசு நகா் பேருந்துகள், தனியாா் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், லாரிகள், டிராக்டா்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் வந்துச் செல்கின்றன. இந்த நிலையில் இந்த தாா் சாலையானது குண்டும், குழியுமாக பேக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விவசாயிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் நாள்தோறும் அவதியுறுகின்றனா். எனவே, தென்கரைக்கோட்டை முதல் கொளகம்பட்டி வரையிலான தாா் சாலையை சீரமைப்பு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பு.