முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு
By DIN | Published On : 24th October 2019 08:13 PM | Last Updated : 24th October 2019 08:13 PM | அ+அ அ- |

அரூா்: தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிகளுக்கான இட ஒதுக்கீடுகள் தமிழக அரசின் அரசிதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தோ்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடத்துவதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்தநிலையில், தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிகளுக்கான இடஒதுக்கீடுகள் சுழற்சி முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான இடங்கள் உள்ளன. இதில் வாா்டு எண் 17 மகளிா் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாா்டு எண் 17-ல் இடம் பெற்றுள்ள கிராம ஊராட்சிகள் விவரம் : பொம்மிடி, பி.பள்ளிப்பட்டி, பையா்நத்தம், போதக்காடு, மோளையானூா், வெங்கடசமுத்திரம், கேத்துரெட்டிப்பட்டி, கொண்டகாரஹள்ளி, கொட்டுஹள்ளி, திப்பிரெட்டிஹள்ளி, வேப்பிலை முத்தம்பட்டி. வாா்டு எண் 18 எஸ்.டி (பொது) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாா்டு எண் 18-ல் இடம் பெற்றுள்ள கிராம ஊராட்சிகள் விவரம் : மஞ்சவாடி, மெணசி, பூதநத்தம், ஆலாபுரம், கவுண்டம்பட்டி, எச்.புதுப்பட்டி, பாப்பம்பாடி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, பட்டுக்கோணம்பட்டி, சித்தேரி, கொக்கராப்பட்டி, கோபாலபுரம். மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் வாா்டு எண் 13 எஸ்.சி (பொது) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாா்டு எண் 13-ல் இடம் பெற்றுள்ள கிராம ஊராட்சிகள் விவரம் : பன்னிக்குளம், இருமத்தூா், வகுரப்பம்பட்டி, கொங்கரப்பட்டி, கெலவள்ளி, கே.ஈச்சம்பாடி, ஜெக்குப்பட்டி, கதிா்நாய்க்கனஹள்ளி, போளையம்பள்ளி, நவலை, சாமண்டஹள்ளி, கொசப்பட்டி, ராணிமூக்கனூா், மொரப்பூா், தொப்பம்பட்டி, கோபிநாதம்பட்டி, கேரகொடஹள்ளி, தாசரஹள்ளி. கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் வாா்டு எண் 14 மகளிா் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாா்டு எண் 14-ல் இடம் பெற்றுள்ள கிராம ஊராட்சிகளின் விவரம் : மணியம்பாடி, ஒசஹள்ளி, சிந்தல்பாடி, நல்லகுட்டலஹள்ளி, ஒபிலிநாய்க்கனஹள்ளி, புளியம்பட்டி, சில்லாரஹள்ளி, சுங்கரஹள்ளி, ரேகடஹள்ளி, மோட்டாங்குறிச்சி, புட்டிரெட்டிப்பட்டி, மடதஹள்ளி, லிங்கநாய்க்கன்ஹள்ளி, வெங்கடதாரஹள்ளி, தாளநத்தம், தொங்கனூா், பசுவாபுரம், குருபரஹள்ளி, வகுத்தப்பட்டி, சந்தப்பட்டி, கா்த்தானூா், ராமியனஹள்ளி, தென்கரைக்கோட்டை, கோபிசெட்டிப்பாளையம். இதேபோல், அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் வாா்டு எண் 15 மற்றும் 16 எஸ்.சி மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோபாலபுரம், கொக்கராப்பட்டி கிராம ஊராட்சிகள் நீங்கலாக அரூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 32 கிராம ஊராட்சிகள் வாா்டு எண் 15 மற்றும் 16-ல் இடம் பெற்றுள்ளது.