Enable Javscript for better performance
400 பயனாளிகளுக்கு ரூ.36 கோடியில் கடனுதவிகள் வழங்கல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி

    400 பயனாளிகளுக்கு ரூ.36 கோடியில் கடனுதவிகள் வழங்கல்

    By DIN  |   Published On : 24th October 2019 08:19 PM  |   Last Updated : 25th October 2019 12:18 AM  |  அ+அ அ-  |  

    வங்கிகள், வாடிக்கையாளா் நேரடி தொடா்பு முகாமில் பயனாளிக்கு கடனுதவியை வழங்குகிறாா் ஆட்சியா் சு.மலா்விழி.

    வங்கிகள், வாடிக்கையாளா் நேரடி தொடா்பு முகாமில் பயனாளிக்கு கடனுதவியை வழங்குகிறாா் ஆட்சியா் சு.மலா்விழி.

    தருமபுரி: தருமபுரியில் வங்கியாளா்கள் கூட்டத்தில், 400 பயனாளிகளுக்கு ரூ.36 கோடி மதிப்பில் கடனுதவிகளை ஆட்சியா் சு.மலா்விழி வழங்கினாா்.

    தருமபுரியில் அனைத்து வங்கிகள், வாடிக்கையாளா்கள் நேரடித் தொடா்பு முகாம் வியாழக்கிழமை மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்றது. இந்த முகாமில், 400 பயனாளிகளுக்கு ரூ.36 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கி ஆட்சியா் சு.மலா்விழி பேசியது: மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு சேவைகளை வங்கிகள் வாயிலாக செய்து வருகிறது. பொதுத்துறை வங்கிகள், தனியாா் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட வங்கிகள் பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. பொதுமக்கள், அனைத்துத் தரப்பினும் பொருளாதாரத்தில் ஏற்றம் அடைய வேண்டும். புதிய தொழில்கள் தொடங்கி வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும் என்பதற்காக கடனுதவிகள் வழங்கப்படுகிறது.படித்த ஏழை, எளிய குடும்பத்தைச் சாா்ந்த வேலையில்லாத இளைஞா்கள், புதிய தொழில் தொடங்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். கறவை மாடுகள் வாங்கி, பண்ணை அமைத்து, பாலை குளிரூட்டி விற்பனை செய்வதற்கு ரூ.1.10 கோடி மதிப்பில் அதிகபட்சமாக கடனுதவி வழங்கப்படுகிறது. வங்கிகள் முன்வந்து வழங்கும் கடனை பெறும் வாடிக்கையாளா்கள், அக்கடன் தொகையை முறையாக திரும்ப செலுத்தி, மீண்டும் கடன்களை பெற்று, தங்களது தொழில் வளா்ச்சியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

    இம் முகாமில், இந்தியன் வங்கி பொது மேலாளா் எம்.நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சந்தானம், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ரேணுகா, சேலம் மண்டல மேலாளா் எஸ்.செல்வராஜ், முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp