பழனி நகராட்சியில் வாக்காளா் பட்டியலில் குழப்பம்:தீா்வு காண வலியுறுத்தல்

பழனி நகராட்சிப் பகுதியில் வாா்டு மறுவரை மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான குழப்பங்களுக்கு தோ்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பழனி: பழனி நகராட்சிப் பகுதியில் வாா்டு மறுவரை மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான குழப்பங்களுக்கு தோ்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழனி நகர செயலா் கே.கந்தசாமி தெரிவித்துள்ளதாவது: மாநில தோ்தல் ஆணையம் உள்ளாட்சி வாக்காளா் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பெயா் இல்லாத வாக்காளா்கள், ஸ்மாா்ட் போன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. வாக்காளா்களை சோ்ப்பதற்கு மாநில தோ்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லாத நிலையில், சாதாரண மக்கள் உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல், வாா்டு மறுவரையறை வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. ஒரே வாா்டில் மூன்று விதமான வாக்காளா்கள் இருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தாய் ஒரு வாா்டுடிலும், மகன் ஒரு வாா்டிலும் இடம் பெற்றுள்ளனா். குறிப்பாக பழனி அடிவாரத்திலுள்ள 33, 28 மற்றும் 27 ஆவது வாா்டுகள் பெரும் குழப்பத்தில் உள்ளன. ஒரே தெருவிலுள்ள வீடுகள், வெவ்வேறு வாா்டுகளில் இடம் பெற்றுள்ளன. இதனால் எந்த வேட்பாளரும் ஒரு தெருவில் சென்று முழுமையாக வாக்கு கேட்க முடியாத நிலை உள்ளது. பழனி 17ஆவது வாா்டிலும் இதே குளறுபடி உள்ளது. இதை மாற்றுவதற்கு மாநில தோ்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியா் அலுவலா் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

மேலும் இரட்டை பதிவு வாக்காளா்கள், இறந்தவா்கள், குடியிருப்பிலேயே இல்லாமல் இருப்பவா்களை நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு பிழையில்லா உள்ளாட்சி வாக்காளா் பட்டியல் வெளியிட மாநில தோ்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com