Enable Javscript for better performance
பொம்மிடியில் ஆக்கிரமிப்புகளைஅகற்றக் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பொம்மிடியில் ஆக்கிரமிப்புகளைஅகற்றக் கோரி சாலை மறியல்

    By DIN  |   Published on : 31st October 2019 10:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூா்: பொம்மிடியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வணிகா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி-கடத்தூா், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை ஓரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளனா்.

    இதேபோல், பொம்மிடி ரயில் நிலையம் எதிரிலும், ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்திலும் சிலா் ஆக்கிரமிப்புகளை செய்து சாலையோரத்தில் கடைகளை வைத்துள்ளனா். இதனால், பொம்மிடி நகா் பகுதியில் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    இதையடுத்து, பொம்மிடியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகாா் தெரிவித்து, வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொம்மிடி-கடத்தூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தகவல் அறிந்து வந்த வருவாய் மற்றும் காவல் துறையினா் வணிகா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின்பேரில், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த மறியல் காரணமாக பொம்மிடி-கடத்தூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai