மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

எறிபந்து, கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

எறிபந்து, கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

தருமபுரியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் மேல்மூத்தோா் பிரிவில் எறிபந்து மற்றும் கபடி போட்டிகள், மூத்தோா் பிரிவில் கைப்பந்து ஆகிய போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா். இதேபோல், கூடைப்பந்து போட்டியிலும் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்கள், பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியா்கள் சி. சுரேஷ், ம.பூவரசன் ஆகியோரை பள்ளியின் தலைவா் கு. சென்னகிருஷ்ணன், தாளாளா் அ. ராமலிங்கம், செயலா் ஜெ.ஜெகநாதன், பள்ளி முதல்வா் ரா.மோகன்தாஸ், பள்ளி ஆசிரியா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com