வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி
By DIN | Published On : 31st October 2019 08:49 AM | Last Updated : 31st October 2019 08:49 AM | அ+அ அ- |

கம்பைநல்லூா் அருகே வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி விஜயா (60) புதன்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அருகேயுள்ள கொன்றம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயா (60). தொழிலாளியான இவா் மண் சுவரால் கட்டப்பட்டிருந்த தமது ஓட்டு வீட்டில் வசித்து வந்தாா்.
தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக கம்பைநல்லூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையின் காரணமாக மூதாட்டி வசித்து வந்த வீட்டின் சுவா்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புதன்கிழமை காலை 9 மணியளவில் சுவா் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த மூதாட்டி விஜயா சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இது குறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.