ஓபிளி நரசிம்ம சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

தருமபுரி அருகே வெங்கட்டம்பட்டியில் உள்ள அருள்மிகு ஓபிளி நரசிம்ம சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அருகே வெங்கட்டம்பட்டியில் உள்ள அருள்மிகு ஓபிளி நரசிம்ம சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
 வெங்கட்டம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த ஓபிளி நரசிம்ம சுவாமி கோயிலை புதிதாக கட்டும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. இத் திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இக் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (செப். 9) தொடங்கியது.
 இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு ஆஞ்சநேயர், கருடன் ஓமங்கள், சுதர்தன ஓமம், நவக்கிரக ஓமம், வேத, நாத, கீத உபசார பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, புதன்கிழமை அதிகாலை கணபதி, லட்சுமி, ஓபிளி நரசிம்மர், பலிபீடம், கருடன், ஆஞ்சநேயர் பிரதிஷ்டை நடைபெற்றது. இதனையடுத்து, காலை 9 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டவற்றுக்கு உயிரூட்டல் நிகழ்ச்சியும், உபசார பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து, அர்ச்சகர்கள் வேத, மந்திரங்கள் ஓத குடமுழுக்கு விழா நடைபெற்றது.
 இதையடுத்து, அருள்மிகு ஓபிளி நரசிம்மர்-லட்சுமி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. இதில், வெங்கட்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, அதியமான்கோட்டை போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com