சுடச்சுட

  

  பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான தடகளம் மற்றும் குழுப் போட்டிகளில், கடத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் சிறப்பிடம் வகித்தனர்.
   தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான நிகழ் கல்வியாண்டுக்கான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் அண்மையில், ராமியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
   இப்போட்டிகளில் பங்கேற்ற கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர், இளையோர் கோ-கோ, மூத்தோர் கோ-கோ, வளையப் பந்து, கேரம் போட்டிகளில் முதலிடமும், இளையோர் கேரம், மூத்தோர் கோ-கோ, கபடி, கேரம் ஆகிய போட்டிகளில் இரண்டாமிடமும் பெற்றனர். தடகளப் போட்டிகளில் 21 தங்கம், 12 வெள்ளி என மொத்தம் 51 பதக்கங்களுடன் 97 புள்ளிகள் பெற்று, தொடர்ந்து 14-ஆவது ஆண்டாக சரக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
   போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவியரையும், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேந்திரன், தென்றல், சிவனேஸ்வரி ஆகியோரையும் பள்ளித் தலைமை ஆசிரியை ரமாதேவி, உதவி தலைமை ஆசிரியர்கள் கவிதா, கீதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai