"அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொட வேண்டாம்'

மழைக் காலங்களில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொட வேண்டாம் என மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

மழைக் காலங்களில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொட வேண்டாம் என மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் எம்.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காற்று மற்றும் மழைக் காலங்களில் அறுந்து விழுந்த மின்கம்பிகளை தொடாமல், அது தொடர்பாக மின்வாரிய பிரிவு அலுவலகம் அல்லது
கணினி மயமாக்கப்பட்ட புகார் மையம் எண் 1912-க்கு தெரியப்படுத்தலாம்.
மேலும், மின் பாதையில் ஏற்படும் பழுதுகளை தாங்களாகவே நீக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். அதேபோல, மழைக் காலங்களில் மின்னல் தாக்க வாய்ப்புள்ளதால், மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். மேலும், மின் வேலிகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் பழுதடைந்த ஒயர்கள், மின் கசிவுகளை சீர்செய்ய வேண்டும். அதே போல, மழைக் காலங்களில் மின்னலின் போது செல்லிடப்பேசிகளை "சார்ஜ்' செய்துகொண்டே பேசுவதை தவிர்த்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com