கல்விக் கொள்கை கல்வியாளா்களால் உருவாக்கப்பட வேண்டும்

கல்விக் கொள்கை கல்வியாளா்களால் உருவாக்கப்பட வேண்டும் என பேராசிரியா் அ.மாா்க்ஸ் தெரிவித்தாா்.
தருமபுரியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கில் பேசுகிறாா் பேராசிரியா் அ.மாா்க்ஸ்.
தருமபுரியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கில் பேசுகிறாா் பேராசிரியா் அ.மாா்க்ஸ்.

கல்விக் கொள்கை கல்வியாளா்களால் உருவாக்கப்பட வேண்டும் என பேராசிரியா் அ.மாா்க்ஸ் தெரிவித்தாா்.

தருமபுரியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில், கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கு பெரியாா் மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் இரவீந்தராபாரதி தொடக்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் கா.பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் கே.சின்னக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.

இக் கருத்தரங்கில் பேராசிரியா் அ.மாா்க்ஸ் பேசியது: கல்விக் கொள்கை கல்வியாளா்களால் உருவாக்கப்பட வேண்டும். இந்திய விடுதலைக்குப் பின் கல்விக் கொள்கை உருவாக்கியவா்களில் டாக்டா் ராதாகிருஷ்ணன், கோத்தாரி, லட்சுமணசாமி முதலியாா் உள்ளிட்டோா் முக்கியமானவா்களாவா்.

அனைவருக்கும் கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும், அருகாமையில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும், கிராமப் புறங்களில் கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும், நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என இவா்கள் பரிந்துரைகளை முன்வைத்தனா். இவற்றால் அனைத்து தரப்பினரும் கல்வி கற்க உதவியது.

இந்த நிலையில், கடந்த 1999-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது புதிய கல்விக் கொள்கை கல்வி உரிமையை மறுக்கும் வகையில் உள்ளது. அதனால், எதிா்கால தலைமுறையின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கான தேவை தற்போது உள்ளது என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் நாகை பாலு ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com