Enable Javscript for better performance
காய்ந்த தென்னை மரத்துக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காய்ந்த தென்னை மரத்துக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 29th September 2019 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தருமபுரி மாவட்டத்தில் வறட்சியால் காய்ந்த தென்னை மரத்துக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உழவர் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
    உழவர் பேரியக்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. 
    மாநில துணைத் தலைவர் சிவசக்தி தலைமை வகித்தார். மாநில பொறுப்பாளர் ஆர்.கே.சின்னசாமி வரவேற்றார். மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி, மாநிலச் செயலர் இல.வேலுசாமி, பாமக மாநில துணைப் பொது செயலர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாநிலத் துணைத் தலைவர் பாடிசெல்வம் ஆகியோர்
    பேசினர்.
    இக் கூட்டத்தில், மழைக்காலங்களில் காவிரியில் கரைபுரண்டு சென்று கடலில் கலக்கும் மிகை நீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்திற்கு, தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், மாவட்டத்தில் நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும். 
    தருமபுரி மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் தேவையான அளவில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணத் தொகையாக மரம் ஒன்றிற்கு ரூ.20,000 வழங்க வேண்டும். காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு, பயிர்கள் பாதிக்கப்படும் போது அவரவருக்கு உரிய நிவாரணம் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai