Enable Javscript for better performance
பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள்முதல்வன் விருது பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள்முதல்வன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 29th September 2019 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தருமபுரியில், அன்னை கஸ்தூரிபா சேவை சங்கம் சார்பில் வழங்கப்படும் முதல்வன் விருது பெற 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து, அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனர் தகடூர் இரா.வேணுகோபால், பொதுச் செயலர் பி.சுதாகரன் ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி அன்னை கஸ்தூரிபா சேவா சங்க, கவியரசு கண்ணதாசன் நற்பனி மன்றம் சார்பில் மகாத்மா காந்தி, அன்னை கஸ்தூரிபா 150-ஆவது பிறந்தநாள் விழா, கஸ்தூரிபா சேவா சங்க 50-ஆவது ஆண்டு விழா, காமராஜர் முதல்வன் விருது வழங்கும் விழா, ஆகிய முப்பெரும் விழா வருகிற அக்.6-ஆம் தேதி தருமபுரி நெசவாளர் காலனியில் உள்ள டிஎன்சி விஜய் மஹாலில் நடைபெற உள்ளது. 
    இதில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வன் விருது வழங்கப்பட உள்ளது. எனவே, இவ் விருது பெற தகுதியான மாணவர்கள் தங்களின் புகைப்படம், மதிப்பெண் விவரம் ஆகியவற்றை உடனே அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றனர். தொடர்புக்கு: 9360830519.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai