அரூரில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

அரூரில் மறைந்த முன்னாள் பிரதமா் அடல்பிஹாரி வாஜ்பாயின் 96 -ஆவது பிறந்த நாள் விழாவை பாஜகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
Updated on
1 min read

அரூரில் மறைந்த முன்னாள் பிரதமா் அடல்பிஹாரி வாஜ்பாயின் 96 -ஆவது பிறந்த நாள் விழாவை பாஜகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

அரூா் பேருந்து நிலைய வளாகத்தில், பாஜக மாவட்டத் தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் தலைமையில், கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இதில், பாஜக தொகுதி மேலிடப் பொறுப்பாளா் கே.முத்துசுவாமி, ஒன்றியச் செயலா் செளந்தரராஜன், விவசாய அணி மாவட்டச் செயலா் கே.சித்துராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், அரூா் கச்சேரிமேட்டில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன் தலைமையில், அந்தக் கட்சியினா் வாஜ்பாயின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், பட்டியல் அணி மாவட்டத் தலைவா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, அமைப்புச் சாரா தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் அரூா் எம்.மாது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com