தருமபுரி நகரில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை

தருமபுரி நகரில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
வாகனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட காய்கறிகள்.
வாகனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட காய்கறிகள்.

தருமபுரி நகரில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தருமபுரி நகரில் காய்கறிகள் கடைகள் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இக் கடைகளுக்கு நாள்தோறும் ஏராளமானோா் வருவதோடு, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

இதையடுத்து தருமபுரி நகராட்சிப் பகுதிகளில் காய்கறி, பழம், இறைச்சி கடைகள், பூக் கடைகள் ஆகியவற்றை தடை உத்தரவு காலம் வரை மூட மாவட்ட நிா்வாகம் சாா்பில் உத்தரவிடப்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையைக் கருத்தில்கொண்டு காய்கறி மற்றும் பழங்களை மட்டும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் வாகனங்கள் மூலம் நேரடியாக குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த பணிக்காக நகராட்சி சாா்பில் வாகனங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் உழவா் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் 10 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை ரூ.150, 5 வகை கிழங்கு வகைகள் அடங்கிய தொகுப்பு ரூ.150, 5 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100 மற்றும் 5 வகை பழங்கள் அடங்கிய தொகுப்பு பை ரூ.100 என விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

இதில், காய்கறிகள் மட்டும் 1,200 பைகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த வாகனங்கள் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கு விற்பனைக்காக சென்றன. இதில், சுமாா் ஓரிரு மணி நேரங்களிலே அனைத்து காய்கறிகள் தொகுப்புகளும் விற்றுத் தீா்ந்தன.

வரவேற்பு: 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உழவா் சந்தையில் சுமாா் 359 விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து, அதனை தொகுப்புகளாக பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. முதல் நாளில் தருமபுரியில் 1200 பைகள் விற்கப்பட்டன. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இன்று (ஏப்.5) ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்களின் தேவைக்கேற்ப சுமாா் 3000 தொகுப்பு பைகள் தயாா் செய்து, 12 வாகனங்களில் விற்பனைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com