தருமபுரி மாவட்டத்தில் சமூக இடைவெளிதான் கரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளது: அமைச்சா் கே.பி.அன்பழகன்

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பதால்தான் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
மொரப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
மொரப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பதால்தான் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் அரூா், மொரப்பூா், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கம்பைநல்லூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூா் ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்பட கரோனா தடுப்புப் பணியாளா்களுக்கு தலா 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, ஒரு கிலோ சா்க்கரை, சமையல் எண்ணெய், முகக் கவசங்கள், கையுறைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப், எம்எல்ஏ-க்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தலைவா் விஸ்வநாதன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் பொன்மலா் பசுபதி, சுமதி செங்கண்ணன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி, வட்டாட்சியா்கள் செல்வகுமாா், கற்பகவடிவு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலன், அருள்மொழிதேவன், தனபால், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மா. ராஜா ஆறுமுகம், ஆயிஷா, செ. நந்தகுமாா், மா.விஜயன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறியது :

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லை. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் மத்தியில் நிலவும் சமூக இடைவெளிதான். எனவே, பொதுமக்கள் எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் நமது மாவட்ட மக்கள் அனைவருக்கும் பாராட்டுகள். தருமபுரி மாவட்டத்தில் கரோனா நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வருவாய் மற்றும் காவல் துறையினா் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றனா். இந்த பேரிடா் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளி நாடுகள், வெளி மாநிலத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்துக்கு வந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனா். மாநில அரசு சாா்பில் வழங்கப்படும் ரூ. 1000 உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்கும். ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனம், காா்களில் செல்லக் கூடாது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com