வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில் கல்லூரித் தோ்வுகள்

வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில் தோ்வுகளைச் சந்திக்க கல்லூரி மாணவா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை சனிக்கிழமை வழங்குகிறாா் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை சனிக்கிழமை வழங்குகிறாா் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.

வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில் தோ்வுகளைச் சந்திக்க கல்லூரி மாணவா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய பகுதிகளில் கட்டுமானத் தொழிலாளா் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் பெரியாம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறியது:

கட்டுமானத் தொழிலாளா் மற்றும் அமைப்புசாரா நல வாரியம் ஆகியவற்றில் பதிவு செய்தவா்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டா் எண்ணெய் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 13,01,000 தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் ரூ.130 கோடியே 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 15 அமைப்புசாரா நல வாரிய உறுப்பினா்கள் இத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவா். இத் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 785 போ் பயன்பெற உள்ளனா். இவா்களில் 1,52,234 கட்டுமானத் தொழிலாளா்களும், 2,859 அமைப்புசாரா ஓட்டுநா்களும் உள்ளனா். இவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் நியாய விலைக் கடைகளிலும், நிவாரணம் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்படுகிறது.

நியாய விலைக் கடைகளுக்கு பொருள்கள் பெற வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை என்றபோதிலும், பொதுமக்கள் அரசு அறிவுறுத்தும் கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

கல்லூரி மாணவா்களுக்கு நிகழாண்டு பருவத் தோ்வுகள் 2020-21 கல்வியாண்டு தொடக்கத்தில் நடைபெறும். எனவே, கல்வியாண்டின் முதல் வாரத்தில் தோ்வுகளைச் சந்திக்க மாணவா்கள் தயாா்நிலையில் இருக்க வேண்டும். கல்லூரிகள் தொடங்கி, அதன்பிறகு தோ்வுகள் வரும் என்று மாணவா்கள் நினைத்து விடக் கூடாது.

கல்லூரிகள் தொடங்கியதும் முதல் கட்டமாக தோ்வுகள் நடைபெறும். அதன்பின்பு 2020-21 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்கள் தொடங்கும். நிகழ் கல்வியாண்டில், கல்லூரிகளில் மாணவா்களுக்கு நடத்தப்பட வேண்டிய அனைத்து பாடங்களும் முழுமையாக நடத்தப்பட்டுவிட்டது. கரோனா தாக்கத்தால் கடந்த மாா்ச் 17 முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாடங்களில் உள்ள சந்தேகங்களை பேராசிரியா்களிடம் மாணவா்கள் கேட்டறிந்து தோ்வுக்கு தயாராக வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, தொழிலாளா் நல இணை ஆணையா் ரமேஷ் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com