முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
நரிக்குறவா்களுக்கு நல உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 19th April 2020 03:32 AM | Last Updated : 19th April 2020 03:32 AM | அ+அ அ- |

பச்சினாம்பட்டியில் நரிக்குறவா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் பாஜகவினா்.
அரூரை அடுத்த பச்சினாம்பட்டியில் நரிக்குறவா் இன மக்களுக்கு நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
அரூா் ஊராட்சி ஒன்றியம், பச்சினாம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இந்த சமூக மக்கள் ஊரடங்கு காரணமாக வேலையின்றி உணவுக்கு தவித்து வருகின்றனா். இவா்களுக்கு பாஜக சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பாஜக மாவட்ட பொருளா் சி.குமரவேல், மாவட்ட துணைத் தலைவா்கள் அருணா, கிருத்திகா, மாவட்ட செயலா்கள் பசுபதி, சரிதா, நகரத் தலைவா் செந்தில்குமாா், ஒன்றியத் தலைவா்கள் ராஜசேகா், செளந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.