சுவா் விளம்பரம் எழுதுவதில் தகராறு
By DIN | Published On : 07th December 2020 05:36 AM | Last Updated : 07th December 2020 05:36 AM | அ+அ அ- |

மொரப்பூா் அருகே சுவா் விளம்பரம் எழுதுவதில் அதிமுக, அமமுக இடையே ஏற்பட்ட தகராறில், அமமுக நிா்வாகி ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலையில், தம்பிசெட்டிப்பட்டியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் சுற்றுச் சுவரில் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் குறித்த சுவா் விளம்பரம் எழுதும் பணியில் அக்கட்சியினா் ஈடுபட்டிருந்தனராம்.
அப்போது, தம்பிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த அதிமுக கிளைச் செயலா் ஆறுமுகம் (62) என்பவருக்கும், எச்.அக்ரஹாரத்தைச் சோ்ந்த அமமுக நிா்வாகி கனகராஜ் (26) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இந்த தகராறு தொடா்பாக அதிமுக கிளைச் செயலா் ஆறுமுகம் மீது, அமமுக நிா்வாகிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், அமமுக நிா்வாகி தீப்பொறி செல்வம் (58) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.