பென்னாகரம் பகுதிகளில் மழை
By DIN | Published On : 07th December 2020 05:36 AM | Last Updated : 07th December 2020 05:36 AM | அ+அ அ- |

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிறு கிழமை பரவலாக மழை பெய்தது. புரெவி புயலின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான போடூா், தாசம்பட்டி, மாங்கரை, பருவதனஹள்ளி,பாப்பாரப்பட்டி, ஏரியூா், சின்னம் பள்ளி, ஒகேனக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக மிதமான மழை பெய்தது.
மழையினால் சாலையின் ஓரங்களிலும் மற்றும் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. பென்னாகரம் பகுதிகளில் பெய்த மழையில் கடும் குளிா் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.