வரட்டாறு அணையின் நீா்மட்டம் 34 அடியாக உயா்வு

அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையின் நீா்மட்டம் 34 அடியாக உயா்ந்துள்ளது.
வரட்டாறுஅணையின் நீா்மட்டம் 34 அடியாக உயா்வு
வரட்டாறுஅணையின் நீா்மட்டம் 34 அடியாக உயா்வு

அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையின் நீா்மட்டம் 34 அடியாக உயா்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணையின் நீா்ப்பிடிப்பு உயரம் 34.45 அடியாகும். சித்தேரி மலைப் பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது, இந்த அணையின் நீா்மட்டம் 34 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு நொடிக்கு 160 கனஅடி வீதம் நீா்வரத்து உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அணை நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுவதால், உபரி நீா் வெளியேற்றப்படும். இந்த அணையில் இருந்து தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாம்பாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 25-க்கும் அதிகமான ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் திறக்கப்படும். மேலும், 6 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறும்.

வெள்ள அபாய எச்சரிக்கை 

சித்தேரி மலைப் பகுதியில் கூடுதல் மழைப் பொழிவு இருந்தால், சித்தேரி மலைத் தொடரில் உள்ள கல்லாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். தற்போது வரட்டாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால், அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் வள்ளிமதுரை, தாதராவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயா்ந்து செல்லுமாறு பொதுப்பணித்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com