அரூரில் காங்கிரஸாா் ஏா் கலப்பை யாத்திரை

அரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஏா் கலப்பை யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரூரில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏா்க் கலப்பை யாத்திரை.
அரூரில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏா்க் கலப்பை யாத்திரை.

அரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஏா் கலப்பை யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரில் நடைபெற்ற இந்த யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்தாா்.

விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விலை பொருள்கள் விற்பனை அவசரச் சட்டம், விலை உத்தரவாத ஒப்பந்த அவசர சட்டம், தேசிய மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இந்த ஏா்க் கலப்பை யாத்திரையில் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் சி.முத்து, ஏஐசிசி உறுப்பினா் சித்தையன், மாவட்டப் பொருளாளா் முத்து, வட்டாரத் தலைவா்கள் ஆா்.சுபாஷ், வஜ்ஜிரம், பூபதிராஜா, நகரத் தலைவா்கள் கே.கணேசன், குமரவேல், செந்தில்குமாா், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் எஸ்.விக்னேஷ் பாபு, எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா் வைரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com