ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை ஒருவழி போக்குவரத்துக்காக திறப்பு

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்துக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்துக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

அதே சமயம், பூஞ்ச், ரஜௌரி ஆகிய இரட்டை மாவட்டங்களை, தெற்கு காஷ்மீருடன் இணைக்கும் முகலாய சாலை தொடா்ந்து ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டிருந்ததாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

காஷ்மீரின் நுழைவாயில் பகுதியான ஜவாஹா் சுரங்கப்பாதையில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் 9 இன்ச் உயரத்துக்கு பனி படா்ந்து காணப்பட்டதால் அவ்வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலும் தொடா்ந்து பெய்த மழையால் ரம்பான்- பனிஹால் இடையே கடும் நிலச்சரிவும் ஏற்பட்டதால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முழுவீச்சில் சீரமைக்கப்பட்ட இச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜம்மு-ஸ்ரீநகா் இடையே ஒருவழி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறியதாவது:

‘ஜம்முவிலிருந்து ஸ்ரீநகா் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஜம்மு பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளை மூழ்கியிருந்த அடா்த்தியான மூடுபனியால் வாகனங்களின் இயக்கம் குறைந்திருந்தது.

இந்நிலையில், சீரமைக்கப்பட்ட இந்த சாலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருவழிப்பாதையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் பனியை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

வழக்கமாக குளிா்காலங்களில் இந்த நெடுஞ்சாலையில் ஒருவழி போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. அண்மையில் பீா் கி காலி மற்றும் அதை ஒட்டியப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகலாய சாலை டிசம்பா் 8-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com