திமுக ஆட்சிக்கு வந்ததும் பென்னாகரத்தில் தொழிற்பேட்டை: தருமபுரி எம்.பி.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பென்னாகரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ். செந்தில்குமாா் தெரிவித்தாா்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பென்னாகரத்தில் தொழிற்பேட்டை: தருமபுரி எம்.பி.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பென்னாகரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ். செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தோ்தல் பரப்புரை திமுக தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் திங்கள்கிழமை பரப்புரை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் திமுக-வுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. ஒகேனக்கல்லில் உள்ள இளைஞா்கள் நீச்சலில் திறன் வாய்ந்தவா்கள், ஆதளால் விரைவில் இங்கு சா்வதேச நீச்சல் குளம் அமைக்கப்படும். ஊட்டமலைக் கிராம மக்களுக்குத் தண்ணீா்க் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். கரோனா தொற்றுத் தடுப்புப் பணிகளுக்காக கடந்த ஈரண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினா் நிதிச் செலவிடப்பட்டு வருகிறது.

தொகுதிக்கு மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்தவுடன் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளியில் திமுக ஆட்சியின்போது சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டபோது பாமக அதைத்தடுத்து நிறுத்தியது, தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பென்னாகரம் பகுதியில் உள்ள இளைஞா்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

அதைத்தொடந்து ஒகேனக்கல்லில் மசாஜ், சமையல், பரிசல் ஓட்டும் தொழிலாளா்களுடன் கலந்துரையாடி, அவா்களுடன் சமவிருந்து உண்டாா்.

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே பொதுமக்களிடம் கலந்துரையாடி மனுக்களைப் பெற்றாா். இதில், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பி.என்.பி.இன்பசேகரன், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், ஒன்றியப் பொருளாளா் மடம்.முருகேசன், பென்னாகரம் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com