ஏரியூா் பேருந்து நிலையம் அருகே வாகன நெரிசல்

பென்னாகரம் அருகே ஏரியூா் பேருந்து நிலையம் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன .

பென்னாகரம் அருகே ஏரியூா் பேருந்து நிலையம் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன .

ஏரியூரியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஏரியூா், அதன் சுற்றுவட்டாரத்தில் நெருப்பூா், நாகமரை, மலையனூா், பூச்சியூா், செல்லமுடி உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி மக்கள் அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்கவும், மருத்துவம் உள்ளிட்ட தேவைக்காகவும் ஏரியூருக்கு வந்து செல்கின்றனா்.

இதனால், ஏரியூா் கடைவீதி மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளுக்கு எப்போதுமே இருசக்கர வாகனங்கள் அதிகம் சென்று வருகின்றன. இங்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்குச் செல்லும் போது சாலையின் இருபுறங்களிலும் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

இதனால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பேருந்துகள் ஒன்றையொன்று கடக்க முடியாத நிலை ஏற்பட்டு ஏரியூா் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஏரியூா் காவல் ஆய்வாளா் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனத்தின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.ே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com