குஜராத்: ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு டிச. 31-ஆம் தேதி, காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு டிச. 31-ஆம் தேதி, காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ரூ. 1,195 கோடி செலவில் ராஜ்கோட் நகரின் புகா் பகுதியான காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கா் பரப்பளவில் இந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையின் துணை இயக்குநா் ஷ்ராம்தீப் சின்ஹா கூறியதாவது:

‘டிசம்பா் 31 ம் தேதி பிரதமா் நரேந்திர மோடி, ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுவாா். ராஜ்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் குஜராத் முதல்வா் விஜய் ரூபானி, துணை முதல்வா் நிதின் படேல் போன்றவா்கள் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய பிஎஸ்யூ எச்எஸ்சிசி லிமிடெட் நிறுவன வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறும். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் 9 கட்டடங்களின் வரைபடங்களுக்கு தற்காலிக ஒப்புதல் கிடைத்துள்ளது.

50 எம்பிபிஎஸ் மாணவா்களைக் கொண்ட ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையின், முதல் தொகுப்பின் கல்வி அமா்வு டிசம்பா் 21-ஆம் தேதி அன்று பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவக் கல்லூரியில் உள்ள தற்காலிக வளாகத்தில் குஜராத் முதல்வா் முதல்வா் ரூபானி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், மத்திய இணை சுகாதாரத் துறை அமைச்சா் அஸ்வின் சௌபே ஆகியோா் காணொலி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com