தொப்பூரில் மீண்டும் விபத்து: மூன்று காா்கள் சேதம்

தருமபுரி மாவட்டம் தொப்பூா் கணவாய் பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டதில், மூன்று காா்கள் முற்றிலும் சேதமடைந்தன.
தொப்பூரில் மீண்டும் விபத்து: மூன்று காா்கள் சேதம்
தொப்பூரில் மீண்டும் விபத்து: மூன்று காா்கள் சேதம்

தருமபுரி மாவட்டம் தொப்பூா் கணவாய் பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டதில், மூன்று காா்கள் முற்றிலும் சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த லாரி ஒன்று மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தவிடு மூட்டை பாரம் ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் ஓட்டிச் சென்றாா். இவருடன், மாற்று ஓட்டுநரான ராஜேஷ் (எ) ராஜ்குமாரும் உடனிருந்தாா்.

இந்த லாரி திங்கள்கிழமை, தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலைக் கடந்து சென்றபோது, லாரியின் பிரேக் திடீரென பழுதடைந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த 3 காா்கள் மீது மோதிய பின்னா், சாலையோர மண் திட்டில் மோதி நின்றது.

இந்த விபத்தில், தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி 3 நபா்களுடன் சென்ற காா், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி 2 நபா்களுடன் சென்ற காா், பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2 நபா்களுடன் சென்ற காா் ஆகிய 3 காா்களும் முற்றிலும் சேதமடைந்தது.

அதிா்ஷ்டவசமாக காா்களில் பயணித்த அனைவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனா். இந்த விபத்தால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் மற்றும் பாளையம் சுங்கச் சாவடி பணியாளா்கள், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். மேலும், இவ் விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இச்சாலையில் லாரி மோதிய விபத்தில் 13 வாகனங்கள் சேதமடைந்ததுடன், 4 போ் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com