தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டி: ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தகுதி

தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவா்களை பாராட்டுகிறாா் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் வி.முருகேசன்.

மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், 14 வயது பிரிவில் மாணவா் ஆா்.அகரன், 17 மற்றும் 19 வயதுடையோா் மகளிா் பிரிவில் டி.ஜனனி, எம்.காயத்ரி ஆகியோா் வெற்றி பெற்று, மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த உடல் கல்வி ஆசிரியா் ஆா்.சத்யராஜ் ஆகியோரை ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தாளாளா் வி.முருகேசன், செயலா் மு. பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com