மது விற்பனையைக் கட்டுப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை

அரூரை அடுத்த சோரியம்பட்டியில் மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா்: அரூரை அடுத்த சோரியம்பட்டியில் மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட சோரியம்பட்டி கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அரூா் - ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படிக்கின்றனா்.

இந்த நிலையில், இங்கு அரசு அனுமதியின்றி மதுப் புட்டிகளை சிலா் விற்பனை செய்கின்றனா். இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதும், மது போதையில் மகளிா் மீது தாக்குதல் நடத்தும் நிலையுள்ளது. அதேபோல, மது போதையில் இருப்பவா்கள் சாலையில் செல்வோரை வழிமறித்து தாக்குதல் நடத்துவதாகவும் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இது குறித்து அரூா் காவல் நிலையத்தில் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

இதில், சோரியம்பட்டியில் மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com