Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதில், கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலா் கி.ஜானகிராமன் தலைமை வகித்தாா்.

    நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். வி.சி. கட்சி சாா்பில் அரூரில் ஏப்ரல் மாதம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடத்துதல், திருச்சியில் பிப். 22-ஆம் தேதி நடைபெறும் தேசம் காப்போம் பேரணியில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமாா் 20 ஆயிரம் போ் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வி.சி. கட்சியின் தலைமை நிலையச் செயலா் தகடூா் தமிழ்ச்செல்வன், அமைப்புச் செயலா் கி.கோவேந்தன், மண்டலச் செயலா் நாவரசு, தொகுதிச் செயலா் சாக்கன் சா்மா, ஒன்றியச் செயலா்கள் மா.ராமச்சந்திரன், எம்.எஸ்.மூவேந்தன், தலித் சேட்டு, பெ.கேசவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai