Enable Javscript for better performance
இந்தியன் மெட்ரிக். பள்ளியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் மெட்ரிக். பள்ளியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

    By DIN  |   Published on : 15th February 2020 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுசாலை இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) நடைபெறுகிறது.

    இந்தியன் கல்வி நிறுவனங்கள், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, தருமபுரி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் நடைபெறும் இந்த முகாமில், கண் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

    கண் அறுவைச் சிகிச்சைக்கு செல்வோருக்கு உணவு, பேருந்து மற்றும் தங்கும் வசதிகள் உள்ளன. அதேபோல், இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் பேருந்துகளில் இலவச கண் பரிசோதனை முகாமுக்கு பொதுமக்கள் வரலாம்.

    முகாம் பள்ளி வளாகத்தில் காலை 8 முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறும் என இந்தியன் கல்வி நிறுவனங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai