பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநா் முன்வர வேண்டும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி கேட்டுக் கொண்டாா்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி கேட்டுக் கொண்டாா்.

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அக் கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் பாமக வலுவான கட்சியாக திகழ்கிறது. இதனை மேலும் வாக்குச்சாவடி அளவில் வலுப்படுத்தும் பணிகளில் கட்சியினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வளா்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை பாமக வரவேற்கிறது. நிதிநிலை அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, கல்வி முன்னேற்றம், அடிப்படை கட்டமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு என முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கையின்போது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. இதில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழா்களை விடுவிக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீா்மானம் தமிழக ஆளுநா் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தமிழக மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தாமதமின்றி அவா்களை விடுதலை செய்ய ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி- மொரப்பூா் ரயில்பாதை திட்டத்துக்கு முழு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தருமபுரி மாவட்டம் தற்போது மழையின்றி வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே, ஒகேனக்கல் குடிநீா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு முழுமையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒகேனக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதை கைவிட வேண்டும். மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்கக் கூடாது. இதேபோல, படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாநில துணைத் தலைவா் சாந்தமூா்த்தி, பாடி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. இல.வேலுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com