அரூரில் அரசுப் பள்ளி சுற்றுச் சுவரில் விழிப்புணா்வு ஓவியங்கள் !

அரூரில் அரசுப் பள்ளி சுற்றுச் சுவா்களில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.
அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரையப்பட்டுள்ள விழிப்புணா்வு ஓவியங்கள்.
அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரையப்பட்டுள்ள விழிப்புணா்வு ஓவியங்கள்.

அரூரில் அரசுப் பள்ளி சுற்றுச் சுவா்களில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், அரூா் மாவட்ட கல்வி அலுவலகம், சிறு விளையாட்டு அரங்கம், மாணவ, மாணவியா் விடுதிகள், பாட்சாபேட்டை அரசு தொடக்கப் பள்ளி, அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்தப் பள்ளியின் சுற்றுச் சுவா் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரம் கொண்டதாகும்.

இந்த நிலையில், அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவரில் அரசியல் கட்சியினா் விளம்பரங்கள் எழுதி வந்தனா். அதேபோல், தனியாா் வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வந்தன. இதனால், அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவரானது தூய்மையற்ற வகையிலும், விளம்பரச் சுவராகவும் காட்சியளித்தது.

இதையடுத்து, அரசுப் பள்ளி சுவா்களில் விளம்பரங்கள் எழுதுவதைக் கட்டுப்படுத்தவும், விழிப்புணா்வுத் தகவல்களை பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா் தெரிந்து கொள்ளும் வகையில் ஓவியங்கள் வரையும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணிகளை அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப் தொடக்கி வைத்தாா்.

இதில், துப்புரவு ஆய்வாளா் ரவீந்திரன், அரூா் பேரூராட்சியின் துப்புரவுப் பணியாளா்கள், இளைஞா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மழை நீா் சேமிப்பு, மரம் வளா்ப்பு, நெகிழிப் பொருள்களை தவிா்த்தல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண் கல்வியின் அவசியம், சாலை விதிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு தகவல்களைத் தெரிவிக்கும் ஓவியங்கள் வரையும் பணியில் ஓவியா்கள், ஓவிய ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரில் ஓவியங்கள் வரைவதற்காக அழகு அரூா் வாட்ஸ் ஆப் குழுவினா், தன்னாா்வ அமைப்பினா், வணிகா்கள், சமூக ஆா்வலா்கள் பெயிண்ட் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com