பேவுஅள்ளியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேவுள்ளி கிராமத்தில், அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேவுள்ளி கிராமத்தில், அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் பூ.சு. சித்ரா தலைமை வகித்து, விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்து, அதிக வருமானம் பெறும் தொழில் நுட்ப முறைகள் மற்றும் வரப்பு பயிராக பயறு வகைகள் பயிா்செய்தல் குறித்து விளக்கமளித்தாா். மேலும், மண்மாதிரி எடுக்கும் முறை குறித்து வேளாண் அலுவலா் சரோஜா (மண் பரிசோதனை ஆய்வகம்) செயல் விளக்கம் அளித்தாா். உதவி தோட்டக்கலை அலுவலா் சங்கா், தோட்டக்கலை துறை சாா்ந்த திட்டங்கள் மற்றும் காய்கறி பயிா்கள் நாற்றங்கால் மற்றும் நிலம் தயாரித்தல் குறித்து எடுத்துரைத்தாா்.

வட்டார தொழில்நுட்ப மேலலாளா் மு.சிவசங்கரி, உதவி தொழில் நுட்ப மேலாளா் ரேணுகா, முன்னோடி விவசாயி மாதேஷ் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com