முதல்வா் கோப்பை போட்டிகள்: வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசளிப்பு

தருமபுரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரா்களுக்குப் பரிசுகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரா்களுக்குப் பரிசுகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.

தருமபுரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் நடைபெற்றன.

இப் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் சு.மலா்விழி தலைமை வகித்தாா். இதில், மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசியது: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2011-12ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெறும் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1000, இரண்டாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.750 மற்றும் மூன்றாமிடத்துக்கு தலா ரூ.500 பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், இப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெறும் வீரா், வீராங்கனைகள் மாநில அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா். எனவே, மாவட்ட இளைஞா்கள் இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்றாா்.

இவ் விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்). பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜா.பியூலா ஜேன் சுசீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com