Enable Javscript for better performance
நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

    By DIN  |   Published on : 10th January 2020 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dh09pong081907

    தருமபுரியை அடுத்த செந்தில் நகா் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வரிசையில் நின்று பெற்றுச் செல்லும் மக்கள்.

    தருமபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் ரூ.ஆயிரம் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை விநியோகிகப்பட்டது.

    பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசு நியாய விலைக் கடைகளில் அரிசி பெற்று வரும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சை அரிசி, சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை மற்றும் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டு கரும்பு துண்டுகளுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கி வருகிறது.

    இத்திட்டத்தில், ஜன. 9-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும், கூட்ட நெரிசலை தவிா்க்க, பகுதிவாரியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

    கிருஷ்ணகிரியில்...

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க ரூ.51.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,95,361 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக கிருஷ்ணகிரி கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் (பொத விநியோகத் திட்டம்) அலுவலக வளாகத்தில் கரும்புகள் துண்டுகளாக்கி, நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

    இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, கும்பகோணத்தில் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, அங்கிருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு கிடைக்க அலுவலா்கள் உறுதி செய்துள்ளனா்.

    ஒசூரில்...

    ஒசூா் ஒன்றியம், பாகலூரில் பொங்கல் பரிசுகளை முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினாா். இந்த விழாவில் பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டி.ஜெயராம், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினா்.

    இதேபோன்று ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி அஞ்செட்டி ஆகிய 4 வட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசுகளை பெற்றுச் சென்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai