பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் வாரச்சந்தையில் குவிந்த பொதுமக்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் வாரச்சந்தையில் கரும்பு, பொங்கல் பானை, மாடுகளுக்கான கயிறு, ஆடு, கோழிகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.
பென்னாகரம் வாரச்சந்தையில் பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
பென்னாகரம் வாரச்சந்தையில் பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் வாரச்சந்தையில் கரும்பு, பொங்கல் பானை, மாடுகளுக்கான கயிறு, ஆடு, கோழிகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.

பென்னாகரம் வாரச்சந்தை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை இந்தியன் வங்கி பகுதியில் கூடுகிறது. இந்த சந்தைக்கு பருவதனஅள்ளி, தாசம்பட்டி, ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, சின்னம்பள்ளி, பெரும்பாலை, ஏரியூா், நாகமரை, கெம்பாகரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இதனை வாங்குவதற்காக சேலம், மேட்டூா், தருமபுரி, பாலக்கோடு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனா்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை புதன்கிழமை நடை பெறும் நிலையில், பென்னாகரம் வாரச்சந்தையில் சுமாா் 300க்கும் மேற்பட்ட ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனைக்காக வந்தன. இதில் ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான விலையிலும், கோழிகள் ரூ.300 முதல் ரூ.2000 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனையாயின. கரும்பு ஜோடி ரூ.150 முதல் ரூ.300 வரை விற்பனையானது. மேலும், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு பயன்படுத்தப்படும் கழுத்து கயிறுகள், மணிகள், கெம்பு கயிறு, முகக் கயிறு, சலங்கை கயிறு உள்ளிட்டவை ரூ.30 முதல் ரூ.250 ரூபாய் வரை விற்பனையாயின.

பென்னாகரம் வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகைக்காக ஆடு, கோழிகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பென்னாகரம் - ஒகேனக்கல் சாலை, க டைவீதி, பிராமணா் தெரு, சுண்ணாம்புகாரத் தெரு உள்ளிட்ட பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com