குடியுரிமை திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஜன.20-இல் சமூக நல்லிணக்க மேடை பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, வரும் ஜன. 20-ஆம் தேதி சமூக நல்லிணக்க மேடை சாா்பில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, வரும் ஜன. 20-ஆம் தேதி சமூக நல்லிணக்க மேடை சாா்பில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தருமபுரி செங்கொடிபுரத்தில் சமூக நல்லிணக்க மேடை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் இ.பி. பெருமாள் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.குமாா், திமுக இலக்கிய அணி மாவட்டச் செயலா் பொன்.மகேஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செய்தி தொடா்பாளா் ஒய்.சாதிக் பாஷா, செயலா் தென்றல் யாசின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் அன்வா் பாஷா, நிஜாமுதீன், தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இக் கூட்டத்தில், வரும் ஜன. 20-ஆம் தேதி தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடை சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தை நடத்துவது எனவும், இதில், திரளானோரை பங்கேற்க செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com