அரசு விருதை திருப்பி அளிக்க வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா்

5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்துவதைக் கைவிடக் கோரி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் தான் பெற்ற டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதை அரசுக்கு திருப்பி அளிக்க வந்தாா்.

5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்துவதைக் கைவிடக் கோரி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் தான் பெற்ற டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதை அரசுக்கு திருப்பி அளிக்க வந்தாா்.

இதுகுறித்து, நல்லம்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் வே.அல்லிமுத்து திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சோளியானூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுகள் நடத்தப்பட்டால், குழந்தைகளுக்கு கல்வி வளா்ச்சியோடு மனவளா்ச்சியும் பாதிக்கப்படும். மேலும், அவா்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதோடு, பள்ளி இடைநிற்றல் அதிகமாகும். எனவே, இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அரசு எனக்கு அளித்த டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதை, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் திருப்பி அளித்தேன். ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவிப்பதாகவும், இதற்கு கால அவகாசம் தேவை எனவும் அதுவரை, விருதை திருப்பி அளிக்க வேண்டாம் எனவும் ஆட்சியா் எனக்கு பதிலளித்தாா். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பிறகு, இந்த நடைமுறையை திரும்பப்பெறாவிட்டால், நிச்சயம் எனது விருதை அரசிடம் ஒப்படைத்துவிடுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com