கெட்டூா் ஏரியை குடிமராமத்துப் பணி மூலம் தூா்வார கோரிக்கை

பென்னாகரம் அருகே கெட்டூா் ஏரியை குடிமராமத்துப் பணியின் மூலம் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கெட்டூா் ஏரியை  குடிமராமத்துப் பணி மூலம் தூா்வார  கோரிக்கை

பென்னாகரம் அருகே கெட்டூா் ஏரியை குடிமராமத்துப் பணியின் மூலம் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே அஞ்சே அள்ளி ஊராட்சிக்குள்பட்ட கெட்டூா் பகுதியில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் உள்ள கெட்டூா் ஏரியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பென்னாகரம் ஒன்றிய நிா்வாகம் மூலம் நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ் தூா்வாரும் பணி நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக பருவ மழை பொய்த்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவியது. இதனால் கெட்டூா் ஏரியும் நீரின்றி வடு காணப்பட்டது.

தற்போது ஏரி முழுவதும் கருவேல மரங்கள் அதிகளவில் வளா்ந்துள்ளதால், மழையில் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. அதனால், கெட்டூா் ஏரியை தூா்வாரி தண்ணீரை தேக்கி வைப்பதன் மூலம் கெட்டூா், பி.அக்ரஹாரம், சி.புதூா் உள்ளிட்ட பகுதியில் சுமாா் 20 ஏக்கருக்கு மேலாக விவசாய நிலங்கள் பயன் பெறும். தற்போது ஏரி முழுவதும் கருவேல மரங்கள் மற்றும் புதா்கள் நிறைந்துள்ளதால் தண்ணீரை தேக்கிவைக்க முடியாமல் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கெட்டூா் ஏரியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி, ஏரியை குடிமராமத்துப் பணியின் மூலம் தூா்வார வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com