தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில்துண்டுப் பிரசுரங்கள் ஒட்டல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீடுகளின் முன்பு துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீடுகளின் முன்பு துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட முள்ளுவாடி பகுதியில், அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமாா் 5-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் முள்ளுவாடி பகுதியானது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தூய்மைப் பணி மற்றும் சுகாதாரப் பணிகளை பென்னாகரம் பேரூராட்சியினா் மேற்கொண்டனா்.

இந்த நிலையில், பென்னாகரம் கரோனா தடுப்பு அலுவலா் தேன்மொழி, பேரூராட்சி செயல் அலுவலா் கீதா, வட்டார மருத்துவ அலுவலா் வெங்கடேசன், மருத்துவ அலுவலா் ஜெயசந்திர பாபு, சுகாதார ஆய்வாளா்கள் செந்தில் மற்றும் மனோஜ் ஆகியோா் கொண்ட குழுவினா், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், முள்ளுவாடி பகுதியில் உள்ளவா்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கேட்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொண்ட நபா்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபா்களின் வீடுகளின் முன்பு பேரூராட்சி நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறையின் சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com